/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/128_19.jpg)
சமீபத்தில் இமையமலைபயணம் முடித்த ரஜினி, தொடர்ந்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரைச் சந்தித்து வந்தார். இந்நிலையில் இன்று பெங்களூரு சென்ற அவர் அங்குள்ள ராகவேந்திரா கோவிலில் வழிபட்டார்.
இதனைத்தொடர்ந்து திடீர் சர்ப்ரைஸாக சாந்தி நகர் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு வருகை தந்துள்ளார். இதே பணிமனையில் தான்சினிமாவில் நுழைவதற்கு முன்பு சிவாஜி ராவாகபேருந்து நடத்துநர் பணி செய்தார். அதன் நினைவாகச் சென்ற அவர் அங்கிருந்த ஊழியர்களிடம் சில நிமிடங்கள்உரையாடினார். அவரைக் கண்டதும் அங்கிருந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இயக்குநர் பாலச்சந்தர், சிவாஜி ராவ்வை ரஜினிகாந்த் என்ற பெயருடன் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான ஜெயிலர் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் ரூ. 600 கோடியை கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதன்படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)