என்கவுண்டர் சரியா? தவறா? - விரிவாக பேசும் ரஜினியின் ‘வேட்டையன்’

rajini vettaiyan teaser released

ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்‘வேட்டையன்’. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்தாண்டு ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் வெளியாகி கவனம் பெற்றதையடுத்து படத்திலிருந்து ‘மனசிலாயோ...’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆனது. இதனிடையே படத்தின் டப்பிங் பணிகளை மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரஜினிகாந்த் ஆகியோர் தொடங்கியிருந்தனர். இதையடுத்து படத்தின் இரண்டாவது பாடல் ‘ஹே சூப்பர் ஸ்டாருடா...’ பாடல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை தொடர்ந்து வெளியிட்டு வரும் படக்குழு, இதுவரை ரூபா என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் ரித்திகா சிங்கும் சரண்யா என்ற கதாபாத்திரத்தில் துஷாரா விஜயனும் தாரா என்ற கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியரும் நடித்துள்ளதாக அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து ராணா டகுபதி நட்ராஜ் என்ற கதாபாத்திரத்திலும் ஃபகத் ஃபாசில் பேட்ரிக்(Patrick) என்ற கதாபாத்திரத்திலும் அமிதாப் பச்சன் சத்யதேவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதை பார்க்கையில் போலீஸ் என்கவுண்டர் சரியா தவறா என்பதை பற்றி விரிவாக பேசியிருக்கின்றனர். அதற்கேற்றாற்போல் ரஜினி, “என்கவுண்டர் என்பது குற்றம் செஞ்சவங்களுக்கு கொடுக்கிற தண்டனை மட்டும் இல்லை. இனிமே இந்த மாதிரி குற்றம் நடக்கக்கூடாதுன்னு எடுக்கிற முன் எச்சரிக்கை நடவடிக்கை” என்று பேசும் வசனம் இடம்பெறுகிறது. இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Rajinikanth TJ Gnanavel Vettaiyan
இதையும் படியுங்கள்
Subscribe