Advertisment

தெலுங்கை தொடர்ந்து மலையாளம்; ரஜினி தொடரும் செண்டிமெண்ட் 

rajini vettaiyan first single Manasilaayo released

Advertisment

த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். லைகா தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், கிஷோர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்திலிருந்து கடந்தாண்டு ரஜினி பிறந்தநாளன்று (12.12.2023), அவருக்கு வாழ்த்து தெரிவித்து டைட்டில் டீசர் வெளியானது. அந்த வீடியோவும் அதில் இடம் பெற்ற அனிருத்தின் இசையும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் டப்பிங் பணிகளை மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் ஆகியோர் தொடங்கியிருந்தனர். அதன்பின்பு ஃபகத் பாசில் பிறந்த நாளான கடந்த 8ஆம் தேதி ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் ஆகியோருடன் ஃபகத் பாசில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் ரஜினிகாந்த் இப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்திலிருந்து ‘மனசிலாயோ...’ என்ற தலைப்பில் முதல் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை சூப்பர் சுபு மற்றும் விஷ்ணு எடவன் ஆகியோர் எழுதியிருக்க யுகேந்திரன் வாசுதேவன், அனிருத் ரவிச்சந்தர், தீப்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இவர்களுடன் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் படக்குழு பாடவைத்துள்ளனர். இந்த வீடியோவில், ‘சேட்டன் வன்னல்லே... சேட்ட செய்ய வன்னல்லே... வேட்டையன் அல்லே...’ என்ற பாடல் வரிகளுடன் தினேஷ் மாஸ்டர் நடன இயக்கத்தில் ரஜினி, மஞ்சு வாரியர், அனிருத் உள்ளிட்ட பலர் நடனம் ஆடியுள்ளனர்.

Advertisment

இதற்கு முன்பு ரஜினியின் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் ‘காவாலைய்யா...’ என்ற தெலுங்கு தலைப்பில் வெளியாகியிருந்தது. தற்போது வெளியாகியுள்ள வேட்டையன் படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ...’ என்ற மலையாள தலைப்பில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vettaiyan TJ Gnanavel Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe