Published on 13/10/2018 | Edited on 13/10/2018



ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது லக்னோ மற்றும் வாரணாசியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் ரஜினி, விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சிகள் லக்னோவிலும், வாரணாசியிலும் படமாக்கப்பட்ட நிலையில் ரஜினி, திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர். இந்நிலையில் ரஜினியும், த்ரிஷாவும் சேர்ந்து காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இவர்கள் ஜோடியாக கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.