Advertisment

சார்பதிவாளர் அலுவலகத்தில் ரஜினி

rajini in Thiruporur registrar's office.

Advertisment

ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹைதராபாத்தில் தற்போது நடந்து வருகிறது. இப்படம் இந்தாண்டுக்குள் வெளியாகவுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து 171வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கத்திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து சமீபத்தில் பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா ரஜினியுடன் இணைந்து ஒரு படம் பண்ணவுள்ளதாக அறிவித்திருந்தார். இதனிடையே நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 நடிக்க ரஜினி ஓகே சொல்லியுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே தனது 172வது படத்திற்காக மாரி செல்வராஜுடன் கூட்டணி வைக்கவுள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில், திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ரஜினி சென்றுள்ளார். சென்னையை அடுத்த நாவலூரில் அவர் புதிதாக இடம் வாங்கியுள்ளதாகவும், அதைப்பதிவு செய்ய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரைக் காண அங்கு ரசிகர்கள் குவிந்துவிட்டனர். மேலும் புகைப்படங்கள் எடுக்க முற்பட்டனர். பின்பு ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு காரில் ஏறிச் சென்றார்.

Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Subscribe