rajini surprise visit kangana new film shoot

Advertisment

கங்கனா ரணாவத்நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் சந்திரமுகி 2 படத்தில் நடித்தார். கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து இந்தியில் வெளியான ‘தேஜஸ்’ படமும் படுதோல்வி அடைந்தது. இதனிடையே இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எமெர்ஜென்சி படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கங்கனா நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இப்படத்தை ஏ.எல். விஜய் இயக்க மாதவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ட்ரிடென்ஸ் ஆர்ட் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். சென்னையில் நடைபெற்ற இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்ட நிலையில், ரஜினி சர்ப்ரைஸாக சென்று வாழ்த்தியுள்ளார். இதனை கங்கனா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து, இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.