Advertisment

"கபில்தேவுடன் பணியாற்றுவது எனது பாக்கியம்" - ரஜினிகாந்த்

rajini shared a photo with kapil dev

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து தனது 170வது படமாக 'ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

Advertisment

'லால் சலாம்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா தயாரிக்கும் இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் திருவண்ணாமலையில் தொடங்கி நடைபெற்று வந்தது. அந்த பகுதியில் நடந்த 34 நாட்கள் படப்பிடிப்பில் விஷ்ணு விஷால் தொடர்பான பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

Advertisment

சமீபத்தில் திருவண்ணாமலை ஷெட்யூலை முடித்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. இதில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.அண்மையில் இப்படத்தின் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்த்லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ரஜினி மொய்தீன் பாய் கெட்டப்பில் இருக்கிறார். அருகில்முன்னாள் இந்திய கிரிக்கெட்அணி கேப்டன் கபில் தேவ் இருக்க அவருடன் உரையாடிக்கொண்டிருக்கிறார். மேலும் "முதன் முறையாக உலகக் கோப்பையை வென்றுஇந்தியாவை பெருமைப்படுத்தியமரியாதைக்குரிய மற்றும் அற்புதமான மனிதர் கபில்தேவுடன் இணைந்து பணியாற்றுவது எனது மரியாதை மற்றும் பாக்கியம்" எனப் பதிவிட்டுள்ளார்.

இன்று மதியம்,கபில்தேவ் அவரது இன்ஸ்டாகிராம்ஸ்டோரியில் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து "இதுபோன்ற பெரிய மனிதருடன் இருப்பது ஒரு மரியாதை மற்றும் பாக்கியமாகக் கருதுகிறேன்" எனப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

kapil Dev Actor Rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe