ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் சிவராஜ்குமார், சுராஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்கக அங்கு சென்ற ரஜினி, தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் அவரிடம் வழக்கம் போல் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
அப்போது ஜெயிலர் 2 தொடர்பான கேள்விக்கு, “ஜெயிலர் 2 ஷுட்டிங் நல்லா போய்டிருக்கு. ஜூனில் ரிலீஸ்” என்றார். இதனிடையே மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது வாங்கியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஏற்கனவே அது தொடர்பாக வாழ்த்து சொல்லி விட்டதாக தெரிவித்தார்.