Rajini shared experience of watching annaatthe movie with her family

சன் பிக்சர்ஸ் நிறுவனம்தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தைச் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அண்ணாத்த திரைப்படம் தீபாவளி தினத்தன்று திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில் நேற்று (27.10.2021) படத்தின் டிரைலர்வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பேரனுடன் அண்ணாத்த படத்தைப் பார்த்து மகிழ்ந்துள்ளார். முதல் முறை தன் பேரனுடன் படம் பார்த்த அனுபவத்தைத்தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,"அண்ணாத்த டீசர் வெளியானதில்இருந்துஎன்னுடைய மூணாவது பேரன் வேத் படத்தை எப்போது பார்க்கலாம் எனக் கேட்டுக்கொண்டே இருப்பான். அதனால் நான் இயக்குநர் சிவாவிடம்படத்தை எப்போ சார் பார்க்கலாம்,பேரன் கேட்டுகிட்டே இருக்கான்னுசொன்னேன். அவரும்நீங்க டெல்லி போயிட்டு வந்தவுடனேபடம் பார்க்கலாம் என்று சொன்னார். இதையடுத்துநேற்று (27.10.2021) சன் நெட்வொர்க் அலுவலகத்தில் 'அண்ணாத்த' திரைப்படம் பார்க்கலான்னுசொன்னாங்க.

Advertisment

என்னுடைய முதல் இரண்டு பேரன்கள் யாத்ராவும், லிங்காவும் தனுஷுடன் கொடைக்கானலில் இருக்கிறார்கள். அவர்களைவிட்டுவிட்டு படம் பார்த்தேன் என்று சொன்னால், அவ்வளவுதான் ரகளையாகிடும். அதனால், அவர்களிடம் சொல்ல வேண்டாம்எனச் சொல்லிவிட்டேன். நானும், சௌந்தர்யா, ஐஸ்வர்யா, மாப்பிள்ளை விசாகன், சம்பந்திகள் அனைவரும் 'அண்ணாத்த' படத்தைப் பார்த்து மகிழ்ந்தோம். குறிப்பாக எனது பேரன் வேத் என் அருகில் அமர்ந்து படம் பார்த்தான், பின்பு என்னைக் கட்டிப்பிடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ‘ஐ யம்சோ ஹாப்பி’ எனச் சொன்னான். எனக்கு ஒரே சந்தோஷமாகி விட்டது. படம் முடிந்து 10 மணிக்கு வெளியே வந்தேன் கலாநிதி மாறன்சார் வெளியே நின்னார். என்ன சார் இந்த நேரத்துல நீங்க வந்திருக்கீங்க என்றேன்.இல்ல சார்உங்கள பார்க்கணும்அல்லவா என்றார். அவ்வளவுபிஸியானமனிதர். என்ன பார்க்க வேண்டியஅவசியமில்லை மேன்மக்கள் மேன்மக்களே " எனக் கூறியுள்ளார்.