rajini

ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2010ஆம் ஆண்டு தொழிலதிபர் அஷ்வினை திருமணம் செய்தார். பின்னர் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து சௌந்தர்யா ரஜினிக்கும் தொழிலதிபரும், நடிகருமான விசாகனுக்கும் சமீபத்தில் காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நேற்று திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமண விழாவில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரை உலகை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அதில்...

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

"என் மகள் சௌந்தர்யா, மணமகன் விசாகன் திருமணத்திற்கு வருகைதந்து வாழ்த்திய மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், திரு முகேஷ் அம்பானி குடும்பத்தினர், திரு திருநாவுக்கரசர், திரு அமர்நாத், திரு கமலஹாசன், மற்றும் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், காவல் துறை நண்பர்கள் என திருமண விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார் ரஜினிகாந்த்