rajini released vanitha vijayakuamar movie release date poster

ராபர்ட், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr). இப்படத்தில் ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கும் இப்படத்தை வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் வணிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார்.

Advertisment

இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இப்படம் ஜூனில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரிலீஸ் தேதி வெளியிடப்படாமலே இருந்தது.

Advertisment

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு வனிதா விஜயகுமார் மற்றும் அவரது மகள் ஜோவிகா உள்ளிட்ட படக்குழுவினர் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். அப்போது ரஜினி, படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை வெளியிட்டார். இப்படம் ஜூலை 4ஆம் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.