Advertisment

"உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா" - ஆடியோ வெளியிட்ட ரஜினி!

uggi

கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, ரஜினி மக்கள் மன்றத்தினர் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்ற நிலையில் ரஜினி ரசிகர் முரளி என்பவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே அவருக்கு ஏற்பட்ட சிறுநீரகப் பிரச்சினை காரணமாக அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் இனி நான் பிழைக்க மாட்டேன் என்று எண்ணிய முரளி நேற்று சமூகவலைத்தளத்தில் ரஜினிக்கு உருக்கமாக பதிவிட்டார். அதில்...

Advertisment

"தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்" என உருக்கமாக பதிவிட்டார். இந்த பதிவை பலரும் ரீட்வீட் செய்து வரும் நிலையில் இதை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக முரளிக்கு ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்...

Advertisment

"முரளி, நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா. தைரியமாக இருங்க. நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து நீங்கள் வீட்டுக்கு வந்துவிடுவீங்க. நீங்கள் குணமடைந்து வந்த பிறகு, ப்ளீஸ் என் வீட்டுக்கு குடும்பத்தோட வாங்க. நான் உங்களைப் பார்க்கிறேன். தைரியமாக இருங்க. ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். தைரியமாக இருங்க. தைரியமாக இரு. வாழ்க" என கூறியுள்ளார்.

ACTORS RAJINIKANTH Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe