Advertisment

''மக்களின் நலனுக்காக ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்'' - ரஜினி அறிவிப்பு!

கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் நிலையில் தமிழகத்திலும் கரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் மருத்துவமனைகளின் பற்றாக்குறையைப் போக்க அரசியல் பிரபலங்கள், கமல்ஹாசன் உட்பட பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய வீடு, திருமண மண்டபங்கள், கல்லூரி வளாகங்களை கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.

Advertisment

vs

மேலும் தனது திருமண மண்டபத்தைக் கரோனா சிகிச்சைக்காக எடுத்துக் கொள்ளலாம் என்று கவிப்பேரரசு வைரமுத்து நேற்று முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தைக் கரோனா சிகிசைக்காக அரசு விரும்பினால் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தரப்பில் கூறும்போது...''கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது 20 நாட்களுக்கும் மேலாக மக்களின் நலனுக்காக அனுமதிக்கப்பட்ட இடம் அது.அதேபோல இப்போதும் ராகவேந்திரா திருமண மண்டபத்தை மக்களின் நலனுக்காக கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம். தமிழக அரசு விரும்பினால் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் சிகிச்சைக்காக ராகவேந்திரா திருமண மண்டபத்தைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்'' எனக் கூறியுள்ளார்கள்.

Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe