Advertisment

பொன்னியின் செல்வன் குறித்து ரஜினி - ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்

rajini praises ponniyin selvan movie and jayam ravis character

Advertisment

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பைபெற்று வருகிறது. மேலும் வசூலில் முதல் நாளேஉலகம் முழுவதும் ரூ.80 கோடி வசூலித்து சாதனை படைத்தது.இதனைதொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன்படத்தைபார்த்து தனது கதாபாத்திரத்தை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயம் ரவி வெளியிட்டுள்ளட்விட்டர்பதிவில், "அந்த 1 நிமிட உரையாடல் எனது நாளை வருடங்களாக மாற்றியது. மேலும் எனது வாழ்க்கைக்கு ஒரு புதியஅர்த்தத்தைசேர்த்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் நன்றி தலைவா. நீங்கள் திரைப்படத்தையும் எனது நடிப்பையும்விருப்பினீர்கள்என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்"எனகுறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர்ஷங்கரும்இப்படத்தைபார்த்து தனதுட்விட்டர்பக்கத்தில், "பொன்னியின் செல்வன்1 கவருகிறது. வருடங்களுக்குப் பிறகு ஒரு தரமான தமிழ் வரலாற்றுத் திரைப்படம். மணிரத்னம் சார்,ஃபிலிம்மேக்கிங்கில்தான் ஒருகிங்என மறுபடியும் நிரூபித்துள்ளார். ஒளிப்பதிவாளர்ரவிவர்மனுக்குஹாட்ஸ்ஆஃப். ஏ.ஆர் ரஹ்மான்மியூசிக்சிறப்பு."எனக்குறிப்பிட்டுள்ளார். மேலும் படக்குழுவினர் அனைவரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

jayam ravi director Shankar Actor Rajinikanth manirathnam ponniyin selvan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe