rajini

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 'பேட்ட' படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் ரஜினிகாந்த் அடுத்ததாக முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட முருகதாஸ், ரஜினியின் அடுத்த படத்தை தான் இயக்குவதாகவும், அந்த படம் சர்கார் படம் மாதிரி அரசியல் சம்பந்தப்பட்ட படம் இருக்காது என்றும், சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இதிலும் இருக்கும் என்றும் முருகதாஸ் அறிவித்து தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், படப்பிடிப்பு வரும் ஜனவரியில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. ரஜினி - முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு 'நாற்காலி' என பெயரிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.