Published on 02/08/2019 | Edited on 02/08/2019

ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தில் நடித்து வரும் நிலையில் இவர் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதை உறுதிப்படுவதுபோல் ரஜினி தர்பார் படத்தின் படப்பிடிப்பிற்கு கிளம்பும் சமயத்தில் சிறுத்தை சிவாவை சந்தித்துவிட்டு சென்றார். இந்நிலையில் ரஜினி சிவா படத்தை தற்போது ரிஜெக்ட் செய்து விட்டதாகவும், அடுத்ததாக அவர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் காட்டுத்தீபோல் பரவி வருகிறது. மேலும் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஜினி தர்பார் படப்பிடிப்பிற்கு கிளம்பும் சமயத்தில் சிவா மட்டுமல்லாமல் கே.எஸ்.ரவிக்குமாரையும் சந்தித்து விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.