ரஜினியின் அடுத்த பட இயக்குநர் ? - வெளியான மாஸ் தகவல்

rajini next film with cibi chakravarthy - new information released

ரஜினிகாந்த தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் படத்தின் சண்டை காட்சிகளை ஸ்டண்ட் சிவா மற்றும் அவரது மகன்கள் கெவின்ஸ்டீவன் ஆகியோர் மேற்கொள்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. ரஜினியின் 169-வது படமாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினியின் 170-வது படத்தின் இயக்குநர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டான்' படத்தின் மூலம் அறிமுகமான சிபி சக்கரவர்த்தி ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. சிபி சக்கரவர்த்தி, தன் இரண்டாவது படத்திலேயே ரஜினியை இயக்கவுள்ளதாக வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Actor Rajinikanth Cibi Chakaravarthi
இதையும் படியுங்கள்
Subscribe