Advertisment

நீண்ட இடைவெளிக்கும் பிறகு மோதும் ரஜினி - கமல் படங்கள்

rajini muthu kamal Aalavandhan re release in same date

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் 'முத்து'. கவிதாலயா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஸ்டைல், காமெடி, ஆக்‌ஷன் என கமர்ஷியல் படங்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால், ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். கிட்டத்தட்ட 170 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் ஜப்பானில் 182 நாட்கள் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.

Advertisment

இந்த நிலையில், இப்படம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸாகவுள்ளது. இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் கடந்த 4ஆம் தேதி தெரிவித்தது. மேலும் டிசம்பரில் வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இதனிடையே முத்து வெளியாகும் அதே நாளில் கமலின் ஆளவந்தான் படம் ரீ ரிலீஸாகவுள்ளது. கமல்ஹாசன் கதை, மற்றும் திரைக்கதை எழுதி சுரேஷ் கிருஷ்ணா இயக்கி கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்திருந்தார். இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் படமாக்கப்பட்டு அடுத்தடுத்த தேதிகளில் இரண்டு மொழிகளிலும் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி மற்றும் கமலின் படங்கள் ஒரே நாளில்வெளியாகவுள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Actor Rajinikanth ACTOR KAMAL HASSHAN
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe