rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'காலா' படத்தையடுத்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, குரு சோமசுந்தரம் உட்பட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஜூன்மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேலும் ரஜினிகாந்த் ஏற்கனவே மேற்கு வங்கம் மற்றும் உத்தரகாண்டில் நடந்த அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட பின்னர் சமீபத்தில் சென்னை திரும்பிய அவர் அரசியல் பணிகளை கவனித்தார். இதையடுத்து மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்த அறிவுரை புத்தகத்தையும் வெளியிட்டார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் தற்போது 3வது கட்ட படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினிகாந்த் நேற்று லக்னோ புறப்பட்டுச் சென்றார். இதைத்தொடர்ந்து இந்த மாதம் இறுதிவரை அங்கு படப்பிடிப்பு நடப்பதாகவும், அத்துடன் படப்பிடிப்பு நிறைவு கட்டத்துக்கு வந்து விடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தலைப்பு ஆகியவை இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் கடந்த இரண்டு மாதங்களாக படத்திற்கு பல்வேறு பெயர்களை பரிசீலித்து, படத்தின் பெயரை தேர்வு செய்ததாக கூறப்பட்ட நிலையில் படத்திற்கு "பேட்ட" என்று பெயர் சூட்டியுள்ளனர். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது படத்தின் மோஷன் போஸ்டரோடு சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/6QS5veNk-gI.jpg?itok=Vz2zm_mm","video_url":" Video (Responsive, autoplaying)."]}