rajini

ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. பொதுவாக ரஜினிகாந்த் தேர்தல் சமயங்களில் ஏதாவது ஒரு வேலையில் பிசியாக இருப்பார். அந்த வகையில் இந்த தடவை முருகதாஸ் படத்தில் அவர் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.