rajini meets malaysia pm

ஜெயிலர் வெற்றியைத்தொடர்ந்து அடுத்ததாக லைகா தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் சன் பிக்சர்ஸ்தயாரிப்பில் நடிக்கஒப்பந்தமாகியுள்ளார். இரண்டு படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Advertisment

சினிமாவைத்தாண்டி அவ்வப்போது பல்வேறு ஆளுமைகளை சந்திக்கும் ரஜினி, சமீபத்தில் இமயமலை பயணம் மேற்கொண்ட பிறகு தொடர்ந்து பல அரசியல் தலைவர்களை சந்தித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தன.

Advertisment

அந்த வகையில் தற்போது மலேசியா சென்றுள்ள ரஜினி, அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட அந்நாட்டு பிரதமர், "ஆசிய மற்றும் சர்வதேச கலை உலக அரங்கில் பரிச்சயமான பெயர் கொண்ட இந்தியத் திரைப்பட நட்சத்திரமான ரஜினிகாந்தை சந்தித்தேன். எனது போராட்டத்திற்கு குறிப்பாக மக்களின் துயரம் மற்றும் துன்பம் தொடர்பாக அவர் அளித்த மரியாதையை நான் பாராட்டுகிறேன். ரஜினிகாந்த் தொடர்ந்துதிரையுலகில்சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்" என ரஜினியைப் பற்றிக்குறிப்பிட்டுள்ளார்.