Advertisment

இளையராஜாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி!

rajini

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறிய இசையமைப்பாளர் இளையராஜா, கோடம்பாக்கத்தில்'இளையராஜா ஸ்டூடியோ' என்ற பெயரில் புதிய ஸ்டூடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார். அவர் தற்போது, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் படத்திற்கான இசையமைப்புப் பணிகளை இங்கு மேற்கொண்டு வருகிறார். ஸ்டூடியோ திறப்பு நிகழ்வில் வெற்றிமாறன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த நிலையில், இளையராஜாவின் இந்தப் புதிய ஸ்டூடியோவிற்கு நடிகர் ரஜினிகாந்த்இன்று திடீர் வருகை புரிந்தார். ஸ்டூடியோவின் கட்டமைப்பைப் பாராட்டிய ரஜினிகாந்த், இளையராஜாவுடன் நீண்ட நேரம் உரையாடினார். இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisment

ilayaraja ACTOR RAJINI KANTH
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe