ரஜினியை வரவேற்ற சந்திரபாபு நாயுடு

rajini meets chandra babu naidu

தெலுங்கு திரையுலகில் மறைந்த மூத்த நடிகர் மற்றும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா இன்று விஜயவாடாவில் கொண்டாடப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் மற்றும் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளதாகஎன்.டி.ஆரின் மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா ஏற்கனவே வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று இந்த பிறந்தநாள் நிகழ்விற்காக தமிழகத்திலிருந்து விஜயவாடா சென்ற ரஜினிகாந்திற்கு, விமான நிலையத்தில் நடிகர் பாலகிருஷ்ணா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஜினிகாந்திற்கு பொன்னாடை அணிவித்து வரவேற்ற பாலகிருஷ்ணாவை ரஜினிகாந்த்ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட மற்றொரு சிறப்பு விருந்தினரான முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ரஜினிக்குபூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Actor Rajinikanth Chandrababu Naidu nandamuri balakrishnan
இதையும் படியுங்கள்
Subscribe