சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில் சிகிச்சை பலனின்றி இயக்குனர் மகேந்திரன் இன்று காலை காலமானார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரின் வயது 79. சென்னை பள்ளிக்கரணையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

RAJINIKANTH

Advertisment

நடிகை ரேவதி, இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா, ஷங்கர், லிங்குசாமி, எஸ்.பி.முத்துராமன், பாலா, மணிரத்னம், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சின்னி ஜெயந்த், மோகன், ராதிகா, இயக்குனர் சிம்பு தேவன், உதயநிதி ஸ்டாலின், சசிக்குமார், மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.

இதில் ரஜினிகாந்த பேசும்போது.... "எனக்கு மிக மிக நெருங்கிய நண்பர், எங்களுடைய நட்பு சினிமாவை தாண்டி இருந்தது. ரொம்ப ஆழமான நட்பு. எனக்குள் இன்னொரு ரஜினிகாந்த் இருக்கிறார் என்று எனக்கே காட்டியவர். புதிய நடிப்பு பரிமாணத்தை சொல்லிக்கொடுத்தவர். முள்ளும் மலரும் பார்த்தபிறகு இயக்குனர் பாலசந்தர் உன்னை நான் அறிமுகப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன் என கடிதம் எழுதினார். அந்த பெருமைக்கு சொந்தக்காரர் மகேந்திரன் சார். அண்மையில் 'பேட்ட' படத்தில் சேர்ந்து பணியாற்றும்போது சூட்டிங்கில் நிறைய பேசிக்கொண்டோம். இப்போ இருக்க சமுதாயத்தின் மேலேயும், சினிமா மேலேயும் அரசியல் மேலேயும் அவர் கொண்டிருந்த அதிருப்தி, கோபம் எல்லாத்தையும் என்னிடம் வெளிப்படுத்தினார். அவர் எப்பேர்ப்பட்ட மனிதர் என்றால், அவர் எக்காரணத்தை கொண்டும் சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி மத்தவங்களுக்காகக் சுயமரியாதையை, சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்காத மனிதர். இப்பொழுது வரும் இயக்குனர்களுக்கு கூட அவர் முன்மாதிரியாக இருக்கிறார். அவருடைய இழப்பு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு. அவர் குடுப்பதாருக்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ரஜினிகாந்த் வெறும் கமர்ஷியல் படங்களுக்கு மட்டும் பேர்போன காலத்தில் அவரிடம் இருந்த கைதேர்ந்த நடிகனை 'முள்ளும் மலரும்' மூலம் வெளிஉலகுக்கு கொண்டுவந்தவர் இயக்குனர் மகேந்திரன். இன்றளவும் அந்த காளி கதாபாத்திரம் பலரின் மனதில் பசுமரத்தாணிபோல் உள்ளதற்கு இவர் ஏற்படுத்திய தாக்கமே காரணம். இதைத்தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் உருவான ஜானி, கை கொடுக்கும் கை படங்களில் ரஜினியின் நடிப்பு இன்னமும் மெருகேறி தேர்ந்த நடிகராக உருவானார். அந்த அளவு தன் படங்களில் நடிக்கும் நடிகர்களின் பல்ஸ் அறிந்து அவர்களை அழகாக செதுக்கி தேர்ந்த நடிகர்களாக மாற்றும் கலையை மிக சுலமபமாக செய்தவர் இயக்குனர் மகேந்திரன்.