rajini kochadaiyaan movie ost update by ar rahman

Advertisment

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழில் சிம்புவின் 'பத்து தல', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இது போக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

30 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் பயணித்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படங்களின் ஓ.எஸ்.டி (ORIGINAL SOUND TRACK) எனப்படும் ஒரிஜினல் பின்னணி இசையை வெளியிடாமல்இருந்து வருகிறார். ஆனால், கடந்த வருடம் நவம்பர் மாதம், "99 சாங்ஸ், வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் 1 உள்ளிட்ட படங்களின்பின்னணி இசையை இந்த மாதம் ஜனவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இம்மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அந்த பதிவிற்கான அடுத்த அப்டேட்டைதற்போது வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வெந்து தணிந்தது காடு மற்றும் கோச்சடையான் படங்களின்பின்னணி இசையின் மாஸ்டர் காப்பிஉரிய மியூசிக் நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டுவிட்டது" எனக்குறிப்பிட்டுள்ளார். எனவே விரைவில் இந்த படங்களின்ஒரிஜினல் பின்னணி இசை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இதனிடையே இசை படைப்புகளின் காப்புரிமையின்வரி தொடர்பாகஜி.எஸ்.டி ஆணையருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இடையேயானவழக்குவிசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.