/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/60_70.jpg)
கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் 'கோச்சடையான்'. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் 'மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்' நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தை சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையொப்பம் செய்திருந்தார்.
இதையடுத்து முரளி மனோகர், அபிர்சந்த் நஹாருக்கு கடந்த 2014ல் ரூ.5 கோடிக்கான காசோலை கொடுத்த நிலையில் அது பணமின்றி திரும்பியது. பின்பு சென்னை விரைவு நீதிமன்றத்தில் முரளி மனோகர் மீது அபிர்சந்த் நஹாவர் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முரளி மனோகருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 5 கோடி ரூபாய்க்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு 7 கோடியே 70 லட்சம் ரூபாயை அபிர்சந்த் நஹாவருக்குமுரளி மனோகர் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து முரளி மனோகர் தரப்பில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.தஸ்னீம், முரளிமனோகரின் மேல் முறையீட்டு மனுவைத்தள்ளுபடி செய்து அவருக்கு வழங்கப்பட்ட 6 மாதசிறைத்தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார். மேலும் அபிர்சந்த் நஹாருக்கு வழங்க வேண்டிய ரூ.7.70 கோடியை வழங்கவும் முரளி மனோகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)