50,000 ஸ்கிரீனில் வெளியாகும் ரஜினியின் ‘2.0’

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி வெளியான 2.0 படம் சீனாவை தவிர உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

RAJINI KANTH

சுமார் 600 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 800 கோடி வரை வசூலை வாரிக்குவித்தது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்‌ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் பிரமாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது இப்படம். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தது.

இந்த வெளியீட்டிற்கு பிறகு சீனாவில் 500,000 திரைகளில் இப்படம் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாதம் 12ஆம் தேதி சீனாவில் வெளியிடப்பட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 50,000 திரைகளில் இப்படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

china
இதையும் படியுங்கள்
Subscribe