சிங்கிளாய் வந்த ரஜினி...மகளுடன் வந்த கமல் !

பாராளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியது. 12 மாநிலங்களில் உள்ள 96 மக்களவை தொகுதிகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 38 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

rk

காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் காலையிலேயே ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்... "அனைவரும் தங்களது வாக்கினை தவறாமல் பதிவு செய்ய வேண்டும்" என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். நடிகர் கமல்ஹாசன் தனது மகள் சுருதிஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியில் வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக கமல் வாக்குப்பதிவு செய்த பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்ததால், காத்திருந்து தனது ஓட்டை பதிவு செய்துவிட்டு சென்றார்.

alt="k" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="a92298da-75cf-4c8d-bbe1-cead21bb1ef3" height="194" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kanchana%203%20336x150%20resize_4.jpg" width="435" />

Lok Sabha election
இதையும் படியுங்கள்
Subscribe