Rajini Kamal to attend the 'Ponniyin Selvan'  audio launch

Advertisment

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நாளை (06.09.2022) பிரமாண்டமாக நடைபெறவுள்ள ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தலைமை விருந்தினராக பங்கேற்கவுள்ளனர். இதனை படக்குழு சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது படக்குழு.

அதன்படி ஐஸ்வர்யா லட்சுமி 'பூங்குழலி' , சோபித துலிபால 'வானதி' , பிரகாஷ் ராஜ் 'சுந்தர சோழர்', ஜெயசித்ரா 'செம்பியன் மாதேவி' , ரஹ்மான் 'மதுராந்தகன்', பிரபு 'பெரிய வேளார்', லால் 'மலையமான்', ஜெயராம் 'ஆழ்வார்க்கடியான் நம்பி' கதாபாத்திரங்களின்ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.