Advertisment

ரஜினியின் 'ஜெயிலர்' படத்துக்கு சிக்கல்!

rajini jailer title issue

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="2b96b113-a680-46d3-92ba-9861770e4e1a" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%20%281%29_7.jpg" />

மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடலான 'காவாலா' முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் நேற்று வெளியான 'ஹுக்கும்' (Hukum) பாடல் ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

Advertisment

இப்படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இப்படம் மலையாளத்தில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஜெயிலர் என்ற அதே தலைப்பில் ஷகீர் மடத்தில் என்ற மலையாள இயக்குநர் படம் எடுத்துள்ளார். அவர், ரஜினியின் ஜெயிலர் படத்திற்கும் தன் படத்திற்கும் இடையூறு இல்லாமல் மலையாளத்தில் மட்டும் தலைப்பை மாற்றக் கோரி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், படத்தின் தலைப்பை 2021 ஆம் ஆண்டு கேரள திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe