rajini jailer second single promo released

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisment

மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடலான 'காவாலா'நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஹுக்கும்' (Hukum) வருகிற 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில் அதற்கான ப்ரோமோ வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ரஜினி பேசும் வசனம் அவரது ட்ரேட் மார்க் பன்ச் வசனம் போல் அமைந்துள்ளது.

அவர் பேசியது, "ஹே... இங்க நான் தான் கிங்கு... நான் வச்சதுதான் ரூல்ஸ். அந்த ரூல்ஸை என் இஷ்டத்துக்கு அப்பப்ப மாத்திக்கிட்டே இருப்பேன். அத கப்-சிப்புனு கேட்டு ஃபாலோவ் பண்ணனும்.அதை விட்டுட்டு ஏதாவது அடாவடித்தனம் பண்ணனும்னு நினைச்ச.. உன்ன கண்டதுண்டமா வெட்டி கழிச்சுப் போட்டுடுவேன். ஹுக்கும்.. டைகர்-கா ஹுக்கும்" என்கிறார். இதைப் பார்க்கையில் வில்லன்களுக்கு மிரட்டல் விடுவது போல் தெரிகிறது. இந்த ப்ரோமோ தற்போது சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment