rajini in jailer ; cast details released

Advertisment

'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்க சண்டை காட்சிகளை ஸ்டண்ட் சிவா மற்றும் அவரது மகன்கள் கெவின் ஸ்டீவன் ஆகியோர் மேற்கொள்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதோடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஒரு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்த தகவல்களைப் படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.