Advertisment

ராமர் கோயில் திறப்பு விழா - ரஜினிக்கு அழைப்பு

rajini invite for ramar Ayodhya Ram Mandir 2024

Advertisment

உத்தரப் பிரதேசமாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி இதில் கலந்து கொள்கிறார். இதனால் பாலிவுட், கோலிவுட், மோலிவுட் என பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், அனுபம் கேர், அக்‌ஷய் குமார், சஞ்சய் லீலா பன்சாலி, சிரஞ்சீவி, மோகன்லால், ரிஷப் ஷெட்டி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளநிலையில் தமிழில் தனுஷிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ரன்பீர் கபூர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சன்னி தியோல், டைகர் ஷெராப் மற்றும் ஆயுஷ்மான் குரானா, பிரபாஸ் மற்றும் யாஷ் ஆகியோருக்கு அழைக்கப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை போயஸ் கார்டனில்ரஜினியின் இல்லத்தில் அவரை சந்தித்து ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் அழைப்பிதழை வழங்கினர்.

Actor Rajinikanth Ayothi Ramar temple
இதையும் படியுங்கள்
Subscribe