rajini himalayan tour

ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர். இப்படம்அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="79f72a26-edf4-465e-a86b-a6ca0df093d6" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-DD-Website_8.jpg" />

Advertisment

இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து லைகா தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 6 ஆம் தேதி இமயமலை செல்லத்திட்டமிட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்கு ஒரு வாரம் தங்கி பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்கும் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

ரஜினிகாந்த் 2010 ஆம் ஆண்டு வரை தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் சென்று வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக இடையில் சில ஆண்டுகளாக இமயமலை செல்லாமல் இருந்த அவர், மீண்டும் காலா, 2.0 படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், தொடர்ந்தார். பின்பு கரோனா காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக இமயமலைக்குச் செல்லாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்ததால் அடுத்த மாதம் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது.