/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2024-07-26 at 3.21.36 PM.jpeg)
ரஜினிகாந்த் தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில், ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிசியான சினிமா வாழ்க்கைக்கு இடையே தனது குடும்பத்துடனும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவ்வப்போது நேரம் செலவிட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த மே 29ஆம் தேதி இமயமலை சென்று ஒரு வாரத்திற்கும் மேல் அங்குள்ள ரிஷிகளுடன் தங்கி, மலை ஏறி புனித பயணம் மேற்கொண்டார். இதையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த அம்பானி இல்லத் திருமண விழாவில் குடும்பத்துடன் பங்கேற்று நடனமாடினார். இது தொடர்பான வீடியோசமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினிகாந்துடன், அவரது மகன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், “இன்று காலை என் மகன் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என அடம்பிடித்தான், அதன் பின் அவனின் சூப்பர் ஹீரோ தாத்தா அவனை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். என்னுடைய அன்பான அப்பா திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் எந்த ரோல் கொடுத்தாலும் அதைச் சிறப்பாகச் செய்பவர்” எனத்தனது அப்பா குறித்து நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)