Advertisment

நாளை மறுநாள் சென்னைக்கு டாட்டா சொல்லும் ரஜினி!

hhhkb

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குநர் சிவா இயக்கிவரும் படம் 'அண்ணாத்த'. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மேலும், ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. பின்பு அவரது உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வெடுத்துவந்தார். இதையடுத்து, மீண்டும் ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்றது.

Advertisment

இதில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டப்பிங் பணிகளையும் ரஜினி விரைவில் முடித்துவிடுவார் என கூறப்படும் நிலையில், ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு பரிசோதனை முடிந்த பிறகு, சிறிது காலம் ஓய்வெடுக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளதால், தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்குப் பயணிக்கவுள்ளார். ரஜினியுடன் அவரது குடும்பத்தினரும் அமெரிக்கா செல்ல உள்ளனர். இதற்காக அவர் மத்திய அரசுடன் பேசி சிறப்பு அனுமதியும் பெற்றுவிட்டதாக கூறப்படும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வரும் 19ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Actor Rajinikanth annathe
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe