style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
'பேட்ட' படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்தாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக சமீபகாலங்களில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்படத்தில் ரஜினி நடிக்க 90 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் தொடங்கி தொடர்ந்து சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.