Rajini for the first time in the direction of Aishwarya

தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் இயக்குநரக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்தாக 'வை ராஜா வை', 'சினிமா வீரன்' (ஆவணப்படம்) ஆகியவற்றை இயக்கியிருந்தார். பின்பு, கடந்த மார்ச் மாதம், மீனு அரோரா தயாரிப்பில் 'ஓ சாத்தி சால்' என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு ‘முசாபிர்’ என்ற இசை ஆல்பத்தையும் உருவாக்கினார்.

Advertisment

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழில் ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் இசை பணிகளை அனிருத் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். ஏற்கனவே தனது இளைய மகள் சௌந்தர்யாவுடன் 'கோச்சடையான்' படத்தில் ரஜினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.