sfdadf

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் 2.o. இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. மேலும் இந்தப் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளதால், கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தப் படம் வெற்றிகரமாக ஓடவேண்டும் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் சிலர் திருப்பரங்குன்றம் வெயில்காத்த அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். மேலும், மண்சோறு சாப்பிட்டும், அங்கபிரதட்சனம் செய்தும் வழிபாடு செய்தனர்.

Advertisment