ரஜினி, தனது 50 ஆண்டுகால திரைபயணத்தை கொண்டாடும் நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘கூலி’ படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இதனால் இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக அமைந்துள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. மற்ற மாநிலங்களில் காலை 6 மற்றும் 8 மணிக்கே தொடங்கியது. இதனால் ரஜினி ரசிகர்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisment

தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் காலை முதலே திரையரங்க வளாகத்திற்குள் குவிந்த ரசிகர்கள், ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனருக்கு பால் அபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து கேக் வெட்டி படத்தை உற்சாகமாக வரவேற்றனர். 

Advertisment

இதனிடையே படத்தில் முன்னணி நடிகர்களான நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், இவர்களுடன் சிறப்பு வேடத்தில் ஆமிர் கான் என நட்சத்திர பட்டாளமே இருப்பதால் மற்ற மாநிலங்களிலும் படத்துக்கு மாஸ் ஓபனிங் கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்களெல்லாம் ஏற்கனவே ஹிட்டடித்துள்ளன. அந்த பாடல்களையும் ரஜினியின் பழைய பாடல்களையும் திரையரங்க வளாகத்திற்குள் ஒலிக்க செய்து வைப் செய்து மகிழ்ந்தனர்.