Published on 12/12/2022 | Edited on 12/12/2022

ரஜினியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள் சார்பாக நேற்று இரவு பாபா திரைப்படத்தின் இரவுக் காட்சியைக் கண்டுகளித்த ரசிகர்கள் பின் திரையரங்க வாசலில் பிரமாண்ட கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் ரஜினி பிறந்தநாளைக் கொண்டாடினர்.
கொண்டாட்டத்தின்போது ரஜினி ரசிகர்கள் ஆரவாரத்துடன் பட்டாசுகள் வெடித்தும், ஆட்டம் பாட்டம் என ரஜினி பிறந்தநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடினர். இதைத் தொடர்ந்து இன்று பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவியும் ஆசிரமங்களில் அன்னதானமும் வழங்க உள்ளதாகத் தெரிவித்தனர்.