darbar

g

Advertisment

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. மேலும் வரும் மே 29ம் தேதி இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினி இப்படத்தில் என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தற்போது புதிய தகவல் கசிந்துள்ளது. தாதா ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிப்பதாகவும், என்கவுண்ட்டர் போலீஸ் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாகவும் மற்றுமொரு தகவல் கசிந்து வருகிறது. லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.