Advertisment

வைப் செய்யும் ரஜினி - வெளியான கூலி பட அப்டேட்

rajini coolie glimpse released

Advertisment

இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமையாக வலம் வரும் ரஜினிகாந்த், கிட்டதட்ட ஐந்து தசாப்தங்களாக நடித்து கொண்டு வருகிறார். கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்திருந்த அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி இன்று தனது 74வது பிறந்தாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில் கூலி படக்குழு ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. ‘சிக்கிட்டு வைப்...’(Chikitu Vibe) எனும் பாடலின் க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. அதில் டி.ராஜேந்தர் குரலில் பின்னணி இசை ஒலிக்க, துள்ளலாக ரஜினி நடனமாடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். முன்னதாக படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இந்த வீடியோவும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

lokesh kanagaraj Coolie Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe