style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் டார்ஜிலிங்கில் நடந்து முடிந்ததையடுத்து தற்போது இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு சென்றுள்ள ரஜினிகாந்த் இரண்டு வாரங்களாக படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இதில் ரஜினிகாந்த், சிம்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், பகலில் விடுதியில் பணியாற்றும் அவர் இரவில் தாதாவாக மாறி சமூக விரோதிகளுடன் மோதுவதுபோல் திரைக்கதை அமைத்து இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் தற்போது டேராடூனில் நடந்து வந்த படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியதையடுத்து இன்று படப்பிடிப்பை முடித்துகொண்டு ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார். இதையடுத்து அவர் சில நாட்கள் இங்கு தங்கியிருந்து அரசியல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு சென்னையில் நடக்கவுள்ள படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்கிறார். இதற்காக சென்னை இ.வி.பி ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மதுரையிலும் சில காட்சிகளை படமாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த மாதம் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">