லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ரஜினிகாந்த் வில்லன்களுடன் மோதுவது போன்ற அதிரடி சண்டை காட்சியை படமாக்குகின்றனர்.

rajini

Advertisment

இதற்காக அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. மூன்று மாதங்கள் தொடர்ந்து மும்பையில் படப்பிடிப்பை நடத்தி ஜூலை மாதம் சென்னையில் சில காட்சிகளை படமாக்கிய பிறகு படப்பிடிப்பு நிறைவடைகிறது. இந்த படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதுவிர கீர்த்தி சுரேஷ், நிவேதா தாமஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரின் பெயர்கள் படத்தில் நடிப்பதாக அடிபட்டு வந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில்.... "ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்து வெளியாகும் தகவலில் உண்மையில்லை. தற்போது வரை நயன்தாரா மட்டுமே ஒப்பந்தமாகி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை ரஜினியின் 'அபூர்வ ராகங்கள்' படம் முதல் 'தலைவர் 167' படம் வரையிலான பட்டியல் வெளியாகவுள்ளது என்றுதற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.