rajini celebrate independence day

ரஜினி சில தினங்களுக்கு முன்பு இமயமலை புறப்பட்டார். அவர் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான 'ஜெயிலர்' படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வசூலிலும் தமிழ் நாட்டில் மட்டும் முதல் 4 நாட்களில் ரூ.90 கோடியும் உலகம் முழுவதும் ரூ.300 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், இமயமலை பயணம் தொடர்பான ரஜினிகாந்த்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அண்மையில் ரிஷி கேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களைச் சந்தித்தார். அங்குள்ள தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார்.

Advertisment

இதைத்தொடர்ந்து பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். இந்நிலையில், நாளை 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்றுரஜினி துவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் சுவாமிகளுடன் இணைந்து தேசியக் கொடி ஏந்திக் கொண்டாடினார்.

.