ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் சிவராஜ்குமார், சுராஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
இந்த நிலையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கேரளா செல்கிறார் ரஜினிகாந்த். அதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் அவரும் கமலும் இணையும் படம் குறித்து பேசியிருந்தர். அதாவது நாங்கள் இணைந்து நடிப்பது உறுதி ஆனால் இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை எனத் தெரிவித்தார்.
இதையடுத்து கோயம்புத்தூர் விமான நிலையம் சென்றார் ரஜினி. அங்கு அவரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் ஜெயிலர் 2 குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “படப்பிடிப்பிற்காக கேரளா போகிறேன். மொத்தம் 6 நாட்கள் எனக்கு படப்பிடிப்பு இருக்கிறது. பட ரிலீஸ் அடுத்த ஆண்டு ஜூனுக்கு பிறகு இருக்கும்” என்றார். பின்பு அவரிடம் திரைக்கலைஞர்களுக்குக் கூடிய கூட்டம் வாக்காக மாறுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நோ கமெண்ட்ஸ்” என முடித்துக் கொண்டார்