Advertisment

ஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திருக்கும் ரஜினி, கமல்! 

rajini kamal

Advertisment

சர்ச்சைகளுக்கு பேர் போன விஸ்வரூபம் படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி பிரமாண்ட வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக விஸ்வரூபம்-2 படத்தையும் கமல்ஹாசன் இயக்கி நடித்தார். இப்படம் சில காரணங்களால் தள்ளிபோய்க்கொண்டே இருந்த நிலையில் சமீபத்தில் தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இதையடுத்து படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருக்கின்ற நிலையில் தற்போது படஅதிபர்கள் போராட்டம் நடைபெறுவதால், காத்திருந்து போராட்டம் முடிந்த பிறகு டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா படமும் ஏப்ரலில் வெளியாகவுள்ளதால் நீண்ட நாட்களுக்கு பிறகு இருபெரும் நட்சத்திரப்படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

kamalhaasan rajini viswaroopam2
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe