Rajini accepts another request of Modi

Advertisment

இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் மத்திய அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரும் வரும் 13 ஆம் தேதி முதல் 15 தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட்டும் தேசியக் கொடியை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் முகப்பு படமாக வைக்கவும் கோரிக்கை வைத்தார். இதில் ஒரு கோரிக்கையை ஏற்று தனது சமூக வலைதளபக்கத்தில் தேசியக் கொடியை முகப்பு படமாக வைத்தார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் மோடி விடுத்துள்ள மற்றொரு கோரிக்கையையும் ரஜினிகாந்த் ஏற்றுள்ளார். அதன் படி தன் வீட்டிற்கு முன்பு தேசிய கோடியை பறக்கவிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது.

இதனிடையே 'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இப்படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 15 அல்லது 22 ஆம் தேதிகளில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.