Advertisment

"நீலாம்பரி முன்னால படையப்பாவோட மரியாதைய கெடுத்துட்டாங்க" - ரஜினி

rajini about ramya krishnan in jailer audio launch

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Advertisment

இதில் ரஜினி பேசுகையில், "யோகி பாபுவுடன் காரில் உட்கார்ந்து ஷூட் பண்ணிக்கிட்டு இருக்கோம். எக்ஸ்பிரஷன் ஷாட். அங்கே இருந்து மைக்கில் சொல்றாங்க. கொஞ்சம் அதிகமாகிடுச்சு, இல்ல இப்போ கம்மியாயிடுச்சு. ரொம்ப அதிகமாகிடுச்சு... இது மாதிரியே சொல்லிக்கிட்டு இருந்தாங்க. யோகி பாபு சரி சரி-னு சொல்லிட்டு பின்பு ஷாட் ஓகே ஆகிடுச்சு. அப்புறம் 'சார்... இவன் சாவடிக்கிறான் சார். ஸ்கேல் வச்சி அளவெடுத்தா நடிக்க முடியும்' என்றார்.

Advertisment

அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன், 32 வருஷம் கழிச்சு இணைந்து நடிக்கிறோம். ஒரு காட்சியில், அவருக்கு ஒரு எக்ஸ்பிரஷன் கொடுத்துட்டு பக்கத்தில் இருப்பவருக்கு ஒரு எக்ஸ்பிரஷன் கொடுக்கணும். 8 டேக்குங்க. நீலாம்பரி முன்னாலஇந்த படையப்பாவோட மரியாதையகெடுத்துட்டாங்க. படத்தில் சீரியஸ் சீனில் காமெடி வரும்" என்றார்.

ramya krishnan Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe